சில வருடங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு திட்டம் மூலம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர், பணி ஓய்வு பெற்றதற்கான முழுமுதற் காரணமாக சொல்வது கழிப்பறை பிரச்சனைகளைத்தான்.
'டயப்பர் கூட பயன்படுத்தி பார்த்தேன். ஃபங்கல் இன்பெக்ஷன் வந்ததுதான் மிச்சம். பொது இடங்கள், அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என பல இடங்களிலும் மாற்று திறனாளிகளின் தேவை குறித்த எந்த விழிப்புணர்வும் யாருக்கும் பெரும்பாலும் இல்லை என்பது மிகுந்த வேதனையான ஒன்று' என்று இந்த சமூகத்தை, நம்மை, அரசைக் கைகாட்டும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?